'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஹமாஸ் பதுங்கும் இடங்களுக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தயாராகி வரும் நிலையில், இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி, ஹமாஸ் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளுக்கு இஸ்ரேல் கருணை காட்ட வேண்டுமானால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பதுங்கு குழியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல், காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் இலக்குகளை குண்டுவீசித் தாக்கி, குறைந்தது 900 குழந்தைகள் உட்பட 2600 பேரைக் கொன்றது.
ட்ஜவும்
4000க்கும் மேற்பட்டவர்கள் பலி
இதனையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் இடையே பெரும் போர் வெடித்தது.
இந்த போரினால் 4000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், "ஹமாஸ் போராளிகளுக்கு எனது பரிந்துரை என்னவென்றால், உங்கள் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு, உங்கள் கைகளை உயர்த்தி, பதுங்குகுழியில் இருந்து வெளியே வாருங்கள், அப்படி செய்தால் ஒருவேளை உங்களுக்கு கருணை கிடைக்கலாம்" என்று இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் சிக்லி ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) மற்றும் இஸ்ரேலிய விமானப்படை(IAF) ஆகிய படைகளை சேர்ந்த 400,000 க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரை காசா பகுதிக்கு வெளியே இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.