Page Loader
மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 
பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.

மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார் 

எழுதியவர் Sindhuja SM
Oct 02, 2023
11:01 am

செய்தி முன்னோட்டம்

தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபர் டெல்லியில் வைத்து பிடிபட்டார். ஷாபி உஸ்ஸாமா(எ)ஷாநவாஸ், டெல்லியில் உள்ள அவரது மறைவிடத்திலிருந்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு என்பது பல மாநிலங்களில் உள்ள பயங்கரவாத வலைப்பின்னல்களை ஒடுக்க NIAவுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஒரு பிரிவாகும். பொறியியலாளரான ஷாநவாஸ், ஐஎஸ்ஐஎஸ் புனே தொகுதி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஆவார். முன்பு ஒருமுறை அவர் புனேயில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவர் டெல்லிக்கு தப்பிச் சென்று அங்கு ஒரு மறைவிடத்தில் வசித்து வந்தார்.

ஜலவ்கின்ள

3 பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது 

சில நாட்களுக்கு முன்பு, ஷாபி உஸ்ஸாமா என்கிற ஷாநவாஸ் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று NIA அறிவித்திருந்தது. இவரை தவிர, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி, அப்துல்லா ஃபயாஸ் ஷேக் ஆகிய மேலும் 2 பயங்கரவாத சந்தேக நபர்களின் விவரங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஷாநவாஸும் விவரம் தெரிவிக்கப்படாத 2 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாநவாஸ் உட்பட 3 பயங்கரவாத சந்தேக நபர்களும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை (IEDs) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் திரவ இரசாயனம் உட்பட பல குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்களை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.