Page Loader
இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது
கிப்புட்ஸ் அலுமிம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்.

இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது

எழுதியவர் Srinath r
Nov 21, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத செயல்கள் தொடர்பான காட்சிகள் தற்போது பரவி வருகிறது. சவுத் ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ் என்ற டெலிகிராம் சேனல் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில் உள்ள காட்சிகள், இசை நிகழ்ச்சி நடைபெற்ற நோவா பகுதிக்கு கிழக்கே உள்ள கிப்புட்ஸ் அலுமிம் பகுதியில் அரங்கேறியவையாக கூறப்படுகிறது. கையில் AK-47 துப்பாக்கிகளுடன் திடீரென தோன்றும், மூன்று ஹமாஸ் பயங்கரவாதிகளை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அதில் ஒரு பயங்கரவாதி, இரண்டு பெண்களை துரத்திச் செல்கிறார். அதில் ஒருவரை தலைமுடியை பிடித்து இழுத்து சுட்டுக் கொள்கிறார். அந்த பெண்ணின் தோழி உயிருக்காக கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல், அவரையும் சுட்டுக் கொள்வது அந்த காட்சியில் பதிவாகியுள்ளது.

2nd card

இசை நிகழ்ச்சியில் 240 பேரை சுட்டுக் கொன்ற ஹமாஸ்

அக்டோபர் 7 ஆம் தேதி, காலை 7 மணிக்கு பதிவாகி உள்ள அந்த வீடியோ காட்சிகள், ஹமாஸ் அப்பாவி இஸ்ரேலி மக்களை குறி வைத்து கொலை செய்தனர் என்பதை உறுதி செய்கிறது. மோட்டார் பொருத்தப்பட்ட பாராக்லேடர்கள் மற்றும் பிக்கப் ட்ரக்குகளில் வழியாக, இசை நிகழ்ச்சி நடந்த நோவா பகுதிக்குள்குள், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர். இதில் 240 நபர்கள் கொல்லப்பட்ட நிலையில், சிலர் பயணக் கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர். மேலும் அக்பர் 7ஆம் தேதி இஸ்ரேல் முழுவதும் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 1,600 இஸ்ரேலிகள் வரை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.