
நாளைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நிறுத்தப்போவதாக பயங்கரவாத மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
நாளை அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 'நிறுத்தப்போவதாக' மிரட்டும் ஒரு வீடியோவை காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ளார்.
குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவர் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸின்' நிறுவனர் ஆவார்.
1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் குறித்தும் அவர் இந்த புதிய வீடியோவில் பேசி இருக்கிறார்.
அந்த சம்பவங்கள் குறித்து பேசி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை அவர் தூண்டிவிட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் விமர்சித்து பேசி இருக்கிறார்.
எக்க்ஜ்ட்வ்,
பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் தொடர் மிரட்டல்கள்
பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல.
கடந்த அக்டோபரில், பன்னுன் பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டினார்.
இதற்கிடையில், ஏர் இந்தியா விமானங்களை தகர்க்க போவதாகவும் அவர் சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார்.
அவர் விடுக்கும் இந்த மிரட்டல்களை அடுத்து, கடந்த செப்டம்பரில், அச்சுறுத்தல்கள் மற்றும் பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டது.