லஷ்கர்-ஏ-தொய்பாவின் முக்கிய தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் பாகிஸ்தானில் கொலை
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால், லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி அக்ரம் கான் காஜி சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள், அக்ரம் கான் கொலையில் உள்ளூர் எதிரிகள் மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினருக்கு தொடர்புள்ளதா என விசாரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பாவின் ஆட்சேர்ப்பு பிரிவில் முக்கிய நபரான அக்ரம் கான், காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகள் ஊடுருவ, அவர்களை மூளைச்சலவை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு மற்றும் வன்மமான பிரச்சாரத்தை அக்ரம் கான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
2nd card
பாகிஸ்தானில் தொடர்ந்து கொள்ளப்படும் தீவிரவாதிகள்
காஜியின் கொலை, சமீபத்திய நாட்களில் லஷ்கர் தலைவரின் மூன்றாவது படுகொலை ஆகும்.
மேலும், இந்த ஆண்டு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் உயர்மட்ட தளபதிகளின் ஆறாவது கொலையாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, கவாஜா ஷாஹித் பாகிஸ்தானின் லைன் ஆப் கண்ட்ரோல் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
தாங்ரி பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட,அபு காசிம் என்கிற ரியாஸ் அகமது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், செப்டம்பரில் ஒரு மசூதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.