கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(சிசிபி) ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர வலைப்பதிவாளர் ஜெனிபர் ஜெங் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்குவதே சீனாவின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பிறந்த பத்திரிகையாளர் மற்றும் உரிமை ஆர்வலரான ஜெனிபர் ஜெங், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "கனடாவில் சீக்கிய மதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இன்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. CCP ஏஜெண்டுகள் தான் இந்தப் படுகொலையை செய்ததாக கூறப்படுகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிகேவ்ஜ்க்
தைவானை கைப்பற்ற சீனா தீட்டும் சதி திட்டம்
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக சமீபத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டால், ஏற்கனவே பதட்ட நிலையில் இருந்த இந்திய-கனடா உறவு மேலும் மோசமாகியது.
இந்நிலையில், சீனா தான் சதி திட்டம் தீட்டி நிஜ்ஜாரை கொலை செய்துவிட்டு, அந்த பழியை இந்தியா மீது சுமத்தியுள்ளது என்று தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தைவானை கைப்பற்றவே இந்தியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே சீனா பிரச்சனையை உருவாக்குகிறது என்றும் ஜெனிபர் ஜெங் கூறியுள்ளார்.