Page Loader
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்

எழுதியவர் Srinath r
Nov 21, 2023
02:14 pm

செய்தி முன்னோட்டம்

26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு இஸ்ரேல் அரசின் சுதந்திரமான முடிவு எனவும், இந்திய அரசு எந்த விதமான கோரிக்கையும் இதில் வைக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இஸ்ரேல், அந்நாட்டிற்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகளை மட்டுமே, இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து வந்த நிலையில், உலக அளவில் தீவிரவாதத்தை எதிர்க்க, இந்நாளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2nd card

லஷ்கர்-இ-தொய்பா "கொடிய பயங்கரவாத அமைப்பு"- இஸ்ரேல்

நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, "கொடிய மற்றும் கண்டிக்கத்தக்க பயங்கரவாத அமைப்பு" எனக் கூறியுள்ள இஸ்ரேல், "நவம்பர் 26, 2008 அன்று நடந்த கொடூரமான செயல்கள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்கள் இடையே இன்னும் எதிரொலிப்பதாகவும்" தெரிவித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில், கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் ஆகிய இரண்டு இஸ்ரேலிகள், உட்பட ஆறு யூதர்கள் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, இரங்கல்களை தெரிவித்துள்ள இஸ்ரேல் தூதரகம், சிறந்த அமைதியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், இந்தியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த இஸ்ரேல்