Page Loader
நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் 
SFJ தலைவர் பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல.

நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் 

எழுதியவர் Sindhuja SM
Nov 05, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனரான பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். நவம்பர் 19ஆம் தேதி அன்று ஏர் இந்தியா விமானங்களை இயக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நவம்பர் 19 முதல் உலகளாவிய முற்றுகை இருக்கும். ஏர் இந்தியா இயக்க அனுமதிக்கப்படாது. சீக்கியர்களே! நவம்பர் 19க்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய வேண்டாம். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்" என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில் பன்னூன் கூறியுள்ளார்.

ஜனக்க்க்

பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் பன்னூன் கூறியுள்ளார். "அந்த விமான நிலையத்தின் பெயர் ஷாஹித் பியாந்த் சிங் என்று மாற்றப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் அதே நாளில்தான் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். "நவம்பர் மாதத்தில் இதே நாளில் தான் உலக பயங்கரவாதக் கோப்பையின் இறுதிப் போட்டியும் நடைபெறும்" என்று அவர் கூறினார். SFJ தலைவர் பன்னூன் மிரட்டல் விடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம், இந்திய-இந்துக்கள் அனைவரும் கனடாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.