நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு
செய்தி முன்னோட்டம்
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎஃப்), அதிரடி நடவடிக்கை பிரிவான கோப்ரா கமாண்டோ பட்டாலியனை, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூஸ் 18 அறிக்கையின்படி, பீகாரின் பர்வாதியில், நக்சல்கள் நடமாட்டம் குறைந்து வருவதால், அங்கு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த 205 கோப்ரா படைப்பிரிவினரை, ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த குழுவுக்கு ஏற்கனவே காடுகள் மற்றும் நகர்ப்புறங்களில் போர்ப்பயிற்சி அனுபவம் உண்டு என்பதால், காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில், அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தற்போது பயிற்சி பெற்று வருகிறது இந்த கோப்ரா பிரிவு.
ட்விட்டர் அஞ்சல்
நக்சல் எதிர்ப்பில் முன்னணியில் கோப்ரா படைப்பிரிவு
#BreakingNews : CRPF's cobra commandos will be deployed in Kashmir, bravehearts of the jungle will now protect the cities@CoBRA_CRPF@KOSCRPF#CRPF #CobraCommando #JKSecurity #JammuAndKashmir pic.twitter.com/x7FyhXUm4q
— News18 Kashmir (@News18Kashmir) July 11, 2023