மத்திய அரசு: செய்தி
மொபைல் போன்களுக்கு வருகிறது 'ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ்'; மத்திய அரசு அறிவிப்பு
செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ் ஒன்றை டிசம்பருக்குள் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான ஏழு பெரிய திட்டங்களுக்கு சுமார் ₹14,000 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூல்; மத்திய அரசு தகவல்
இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆகஸ்ட் மாதத்தில் 10% அதிகரித்து சுமார் ரூ.1.75 லட்சம் கோடியாக உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு
ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை செயலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு
முதன்முறையாக, விண்ணப்பம் பதிவு செய்யும் நேரத்திலும், தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பின் பல்வேறு கட்டங்களிலும், விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை தன்னார்வ அடிப்படையில் சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் மேற்கொள்ள யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அனுமதித்தது.
இந்தியா முழுவதும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
தேசிய தொழில்துறை காரிடர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்கான பாரிய திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது; மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு.
ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்
ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் வரவுள்ளன.
டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
டெலிகிராம் செயலியில் நடைபெறும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் காரணமாக மத்திய அரசு தற்போது அந்த செயலி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வலி நிவாரணிகள் மற்றும் மல்டிவைட்டமின்கள் உள்ளிட்ட 156 FDC மருந்துகளுக்கு மத்திய அரசு தடை
பரவலாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் மல்டி வைட்டமின்கள் உட்பட 156 நிலையான டோஸ் கலவை (FDC) மருந்துகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு
இந்திய அரசாங்கம் இன்ஃபோசிஸிடமிருந்து 4 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருகிறது என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய தேசிய அறுவை சிகிச்சை நிறுவனம் (INIS) உட்பட மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவக் கற்பிக்கும் நிறுவனங்களுக்கும் ஆடைக் குறியீடுகள்(Dress code) குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜன் போஷன் கேந்திரா: 4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ள மத்திய அரசு
மத்திய அரசு, நாடு முழுவதும் மக்களுக்கு சத்தான தானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் நியாய விலைக் கடைகள் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றை பெயர் மாற்றம் செய்துள்ளது.
"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார்.
கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ரூ.2,500 குறைத்தது மத்திய அரசு; டீசல், ஏடிஎஃப் மீதான வரி ரத்து
பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.4,600லிருந்து ரூ.2,100 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அமலுக்கு வந்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல்
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியர்கள் அனைவராலும் சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை வெளியிடவுள்ள மத்திய அரசு: விதிகளை திருத்த வாய்ப்பு
உத்தேச ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் புதிய வரைவு வெளியிடப்படும் என்று திங்கள்கிழமை அரசாங்கம் அறிவித்தது.
எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு
பட்டியலினத்தவர்கள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டிற்குள் கிரீமி லேயர் வரையறையை கொண்டுவர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு சூசகமாக தெரிவித்துள்ளது.
பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது
ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களுக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள மஞ்சேஷ்வரில் வியாழன் அன்று முதல் 24x7 அரிசி ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..இனி உங்களுக்கு குறைவான ஸ்பேம் அழைப்புகளே வரும்
மத்திய அரசாங்கம் கோரப்படாத அழைப்புகளைத் தடுக்கும் நோக்கில் வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.
அட்டவணைப்படுத்தல், LTCG மாற்றங்கள்: ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் அளிக்க திட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பட்ஜெட் 2024 அறிவிப்பைத் தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறையின் கவலைகளைத் தணிக்க இந்திய அரசாங்கம் தற்போது பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே மற்றும் ஆயுதப் படைகளுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய நில உரிமையாளரான வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வக்ஃப் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளது.
வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு
எந்தவொரு சொத்தையும் வக்ஃப் சொத்தாக அறிவித்து, அதை தனதாக்கிக் கொள்வது உள்ளிட்ட வக்ஃப் வாரியங்களின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன், iPad பயனர்களுக்கு அதிக ஆபத்துள்ள பாதிப்பு எச்சரிக்கையை வெளியிட்ட CERT -IN
இந்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி-இன்) ஆப்பிள் தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு உயர் தீவிர பாதிப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதாவிற்கு எதிர்ப்பு
மத்திய அரசால் முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் முதல் வரைவு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தண்ணீர் கசிவு; எதிர்க்கட்சிகள் காட்டம்
கடந்த ஆண்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மத்திய அரசை கடுமையாக தாக்கினர்.
'மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லை...': எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று, மத்திய பட்ஜெட் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளான பீகாரில் ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு விகிதாசாரமாக சாதகமாக உள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா, பயிற்சி அகாடமியில் ஆஜராவதற்கான காலக்கெடு முடிவடைந்தது; அடுத்து என்ன?
சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போலி ஊனமுற்றோர் மற்றும் சாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA) செவ்வாயன்று தனது குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அஜார் ஆகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு
அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு
வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தயாராகும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு இன்று கூட்டியது.
விமானச் செயல்பாடுகள் சீரானது, பேக்லாக் அகற்றப்படுகிறது: மத்திய அரசு
நேற்று மைக்ரோசாப்ட் செயலிழப்பால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, செக்-இன் கவுண்டர்களில் குழப்பமான காட்சிகளுக்கு வழிவகுத்த ஒரு நாளுக்குப் பிறகு விமானச் செயல்பாடுகள் சீராக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பதவிகாலம் முடியும் முன்னரே UPSC தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), சமீபத்தில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான இரண்டாவது பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு பரிசீலனை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் தேர்வு பொதுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள், 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
AI முன்னேற்றதிகாக 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது இந்திய அரசு
இந்திய அரசு, AI மிஷனுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.10,372 கோடியில் இருந்து சுமார் ரூ.5,000 கோடியை GPU களில் முதலீடு செய்ய உள்ளது. இந்த நிதியின் பெரும்பகுதி NVIDIA க்கு செல்லும் என்று கூறப்படுகிறது.