பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது; மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த பணிகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது. ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனத்தெரிவித்துள்ளது.
Twitter Post
3 நாட்கள் நிறுத்தப்படும் பாஸ்போர்ட் சேவை
அந்த அறிக்கையில் மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் ஆவணம் சரி பார்ப்பு நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகிறது. பாஸ்போர்ட் சேவை இணையதளம் 2024 ஆகஸ்ட் 29 வியாழன் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 திங்கள் காலை 6 மணி வரை இயங்காது என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரங்க முன்பதிவு செய்தவர்கள் நேரமுள்ள பிற நாட்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.