அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நாள், 'சம்விதான் ஹத்யா திவாஸ்' என அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட இந்த எமெர்ஜென்சி நாளை பற்றிய விவாதங்கள் எழுந்தது நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக, இன்று முதல் ஆண்டுதோறும், ஜூன் 25ஆம் தேதி, இனிமேல் 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியலமைப்பு கொலைநாள்) என அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். எக்ஸ்- இல் ஒரு பதிவில், அமித் ஷா, "1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை சகித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் இந்த நாள் நினைவுகூரும்" என்று கூறினார். இதனை பிரதமரும் ட்வீட் செய்துள்ளார்.