சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். மேலும் என்பிஎஸ் அல்லது யுபிஎஸ் இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட யுபிஎஸ், அரசு ஊழியர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:- உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. குடும்ப ஓய்வூதியம்: மரணம் ஏற்பட்டால், ஓய்வூதியம் பெறுபவரின் குடும்பம் அவர்கள் இறக்கும் போது பெறப்பட்ட ஓய்வூதியத்தில் 60 சதவீதம் பெறும். குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹ 10,000 இத்திட்டம் உறுதி செய்கிறது. யுபிஎஸ் திட்டத்தில் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு தற்போதைய 14 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி
VIDEO | "The Unified Pension Scheme has five pillars. The (government) employees wanted an assured amount, which was a logical requirement. Thus, 50 per cent assured pension is the first pillar of the UPS. This amount will be the average of basic pay of 12 months before... pic.twitter.com/gKTlZCBOc2— Press Trust of India (@PTI_News) August 24, 2024