ஜன் போஷன் கேந்திரா: 4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ள மத்திய அரசு
மத்திய அரசு, நாடு முழுவதும் மக்களுக்கு சத்தான தானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் நியாய விலைக் கடைகள் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றை பெயர் மாற்றம் செய்துள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேஷன் கடைகளின் பெயரை ஜன் போஷன் கேந்த்ரா என்று மாற்றி உள்ளது. மத்திய அரசின் முதல் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டுள்ள இந்த ஜன் போஷன் கேந்திராவில் 50 சதவீத பொருட்களை சத்துணவு பிரிவின் கீழ் சேமித்து வைப்பதற்கும், மீதமுள்ளவை மற்ற வீட்டுப் பொருட்களை வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது உ.பி., குஜராத், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் அமலுக்கு வந்துள்ளது.
Twitter Post
Twitter Post
பருப்பு வகைகள், பால் உள்ளிட்டவை விற்பனை
மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று வீடியோ கான்பிரென்சிங் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 'ஜன்போஷன் கேந்திராவாக இந்த நியாய விலைக்கடைகள் மாற்றப்படுவதன் மூலமாக நியாய விலைக் கடைகளுக்கு தேவைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, நியாய விலைக்கடைகளின் வருவாய் அதிகரிக்கும்' என்று பிரகலாத் ஜோஷி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட கடைகளில் இப்போது தினைகள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் மற்றும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கடைகள், சில பகுதிகளில் 8-9 நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், மற்றவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும். இவற்றோடு, நியாய விலை கடைகளுக்கான சாகாய் ஆப், மேரா ரேஷன் ஆப் 2.0 ஆகியவற்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.