Page Loader
தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
மாதிரி புகைப்படம்

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2024
08:42 am

செய்தி முன்னோட்டம்

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு. அந்த வகையில் இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் பெறப்பட்டன. அதிலிருந்து 50 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுள், தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினத்தன்று, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கையால் விருது பெற உள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தேசிய நல்லாசிரியர் விருது