"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார். இது பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் வெளியான உத்தரவு எனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். யுபிஎஸ்சி சமீபத்தில் மத்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு உயர் பதவிகளுக்கு லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்புக்கு "திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் இந்திய நாட்டினரை" விண்ணப்பிக்க கோரி ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்தப் பதவிகளில் 24 அமைச்சகங்களில் இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மொத்தம் 45 பதவிகள் நிரப்பப்பட உள்ளன.