வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்த மசோதா மூலம் வக்ஃப் வாரியங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, அதில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 26இன் கீழ், இஸ்லாமியர்களின் நிலம், சொத்துக்கள் மற்றும் மத விவகாரங்களை நிர்வகிப்பதற்கான சுதந்திரத்தை பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மசோதா குறித்த விவாதம் நடக்கும்போது கடும் அமளிகள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.