இந்தியா செய்தி | பக்கம் 22

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

31 Jan 2023

இந்தியா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு

அந்தமான் கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(ஜன 31) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

31 Jan 2023

இந்தியா

விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது

ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது விஸ்தாரா விமானத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது

சேலம் மாவட்டம், பெரிய மாரியம்மன் கோயிலுக்குள் சென்றதற்காக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரைப் பகிரங்கமாகத் மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் டி.மாணிக்கத்தை போலீஸார் நேற்று(ஜன 30) கைது செய்தனர்.

பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்

பழனி முருகர் கோயிலில் நேற்று(ஜன.,30) தைமாத கிருத்திகை உற்சவவிழா சிறப்பாக நடைபெற்றது.

பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள்

2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, அதானி குழுமம் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்

சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா நேற்று(ஜன 30) புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்தில் இடம்பெயரும் மக்களை குடியேற்ற மூன்று வழிகளை பரிந்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புது வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.

அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(LIC), அதானி குழுமத்தில் செய்த முதலீட்டால் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை இன்று(ஜன 30) வெளியிட்டிருக்கிறது.

30 Jan 2023

இந்தியா

இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைபயணம் நேற்றோடு முடிவடைந்தது.

பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்

தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

30 Jan 2023

மோடி

பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது.

பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(ஜன 30) கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ்

ஒடிசாவின் சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ், ஜார்சுகுடா மாவட்டத்தின் உதவி காவல் துணை ஆய்வாளரால் நேற்று(ஜன 29) சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் - பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், மற்றும் முதல்வர் மரியாதை

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்தவர் நமது மகாத்மா காந்தி அவர்கள்.

ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்

ஜனவரி-20 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் புதிய கட்டிட சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

30 Jan 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது.

நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

28 Jan 2023

இந்தியா

ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்

இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்

உத்தரபிரதேசத்தின் ஈத்கா பகுதியில் தேசிய கீதத்தை அவமதித்ததாக மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

28 Jan 2023

இந்தியா

இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம்

இந்தியாவின் சீரம் நிறுவனம் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ஒன்றினை தயாரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப்படையின் விமான தளத்திலிருந்து இன்று காலை வழக்கம் போல் பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகையை சேர்ந்த போர் விமானங்கள் புறப்பட்டு சென்றது.

18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று சான்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

28 Jan 2023

இந்தியா

ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

28 Jan 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

28 Jan 2023

விமானம்

மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள்

இந்திய விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே இன்று(ஜன 28) விழுந்து நொறுங்கியது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் கொண்ட புது செயலி அறிமுகம்

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்கு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தங்கள் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ள வசதியாக திருப்பதி தேவஸ்தானம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Jan 2023

விமானம்

'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது.

28 Jan 2023

இந்தியா

நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?

தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

28 Jan 2023

பாஜக

ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் உள்ள குஜ்ஜார் சமூகத்தினரால் வழிபடப்படும் கடவுளான தேவநாராயணரின் 1,111வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று(ஜன 28) ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திற்கு செல்கிறார்.

16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16ஆண்டுகளுக்கு பிறகு 2023ம்ஆண்டு 27ம்தேதி(நேற்று) விமரிசையாக நடந்தது.

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்

74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதன்முறையாக நடைபெற்றது.

பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள்

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாறிவரும் உலகளாவிய பிரச்சனைகளுக்கு மத்தியில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி இன்று(ஜன 25) பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்தார் என்று ANI தெரிவித்துள்ளது.