
தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசத்தின் ஈத்கா பகுதியில் தேசிய கீதத்தை அவமதித்ததாக மூன்று இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த வீடியோவில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது, அதற்கு முதலில் சலூட் அடித்த இளைஞர் பின் குத்தாட்டம் போடுகிறார்.
"தேசிய கீதம் இசைக்கப்படும்போது மூன்று இளைஞர்கள் நடனமாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலானது. விசாரணையில், அவர்களில் இருவர் அட்னான் மற்றும் ரூஹல் என அடையாளம் காணப்பட்டனர்." என்று ரயில்வே ரோடு காவல்நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சஞ்சய்குமார் சர்மா தெரிவித்திருக்கிறார்.
மூன்று இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக அட்னான் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலான மூன்று இளைஞர்களின் வீடியோ
If you can't respect the national anthem, you don't deserve to be free.
— Zaira Nizaam 🇮🇳 (@Zaira_Nizaam) January 27, 2023
'Adnan' and 'Ruhel' from UP should be behind bars for this act. pic.twitter.com/cLCxCYGUbq