
வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், உடல் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்று அவரே பேட்டிகளில் கூறி இருந்தார்.
அதன்படி, அவ்வப்போது சைக்ளிங் செல்வதும், ஜிம்மில் ஒர்கவுட் செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவ்வப்போது, அவரது ஒர்க் அவுட் வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரல் ஆவதுண்டு.
அதேபோல், நேற்றும் ஒரு வீடியோ ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதில் முதல்வர் ஸ்டாலின், ஜிம்மில், தனது தோள்களுக்கும், கைகளுக்கும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இணையம் முழுவதும் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ
#WATCH || வீடியோ: உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ஸ்டாலின்: இணையத்தில் வைரல்! https://t.co/gkgoZMIuaK | #MKStalin | #CMMKSTALIN | #workout | @mkstalin pic.twitter.com/V7UzdID6Lu
— Indian Express Tamil (@IeTamil) January 29, 2023