NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்
    இந்தியா

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023, 12:54 pm 0 நிமிட வாசிப்பு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(ஜன.,31) துவக்கம்

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31.,) துவங்கவுள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது. மனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 10ம் தேதியே கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் தளத்தில், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    மேலும் வேட்புமனுக்களை காலை 11மணி முதல் 3மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4பேர் மட்டுமே வருவதற்கு அனுமதி என்றும், வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மனுதாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.5ஆயிரமும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிகட்சி சார்பில் இறந்த திருமகன் ஈ.வெ.ரா.,வின் தந்தையும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.,இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனு தாக்கலை பிப்ரவரி 3ம்தேதி தாக்கல் செய்யப்போவதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். மற்றும் ஓபிஎஸ் சார்பில் தனித்தனியே தேர்தல் பணிக்குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தேர்தல்
    ஈரோடு

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    தேர்தல்

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு

    ஈரோடு

    ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர் வைரல் செய்தி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023