
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் அந்த கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளாராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தன்னை வேட்பாளாராக அறிவித்த பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதனை தொடர்ந்து அக்கட்சி அவருக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி 3ம் தேதி
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு
அதன்படி, திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் வரும் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழக முதல்வரை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் பணிகள் துவங்கிய நிலையில்,பிரச்சாரங்களும் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடவேண்டியவை.
தேர்தல் பணிகள் போட்டியிடும் அனைத்து கட்சியினர் மத்தியிலும் சூடுபிடித்துள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி என தனித்தனியாக போட்டியிடுகிறது.
பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சிகள் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.