நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன?
தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30, 31ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். ஐந்து நாள் வங்கி சேவை, ஓய்வூதியத்தை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து கேடர்களிலும் ஆட்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இதனால், இன்று முதல் 4 நாட்கள் விடுமுறையால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும். அதே நேரத்தில் ஏடிஎம் சேவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வங்கி ஊழியர்கள் தொடர்பான கோரிக்கையில், துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்ததிற்கு காரணம் என்ன?
இந்நிலையில், அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் தெரிவிக்கையில், கடந்த 27-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர். மேலும், கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது. எனவே, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது, வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். ஒருவேளை கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.