NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்
    சிறிய விரிசல்கள் உள்ள மற்றும் "பாதுகாப்பான" நிலத்தில் அமைந்துள்ள வீடுகள்/கட்டிடங்களை மறுசீரமைக்க நிதி வழங்க DM முன்மொழிந்துள்ளது.

    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    10:35 am

    செய்தி முன்னோட்டம்

    சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா நேற்று(ஜன 30) புதைந்து கொண்டிருக்கும் ஜோஷிமத்தில் இடம்பெயரும் மக்களை குடியேற்ற மூன்று வழிகளை பரிந்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தில் பணிபுரியும் குழுவின் தலைவரான குரானா, கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனந்த் வர்தன் தலைமையிலான உயர் அதிகாரக் குழுவிடம் தனது பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்கிறார்.

    இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 3 தீர்வுகளை கீழே காணலாம்:

    முதல் தீர்வு

    பாதிக்கப்பட்ட நிலம்/கட்டிட உரிமையாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது.

    இதன் மூலம், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சேதமடைந்த நிலம் அல்லது கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    ஆனால், அவர்கள் முழுமையான இழப்பீட்டை பெறுவதற்கு முன், அவர்களின் நிலம்/கட்டிடம் மாநில அரசுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    ஜோஷிமத்

    இரண்டாவது மற்றும் மூன்றாவது தீர்வுகள்

    இரண்டாம் தீர்வு

    பாதிக்கப்பட்ட சொத்தின் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம், வீடு கட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கும் வழங்கப்படும்.

    100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் இருந்தால், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு விதிமுறைகளின்படி மீதமுள்ள நிலத்திற்கு பணம் வழங்கப்படும்.

    ஆனால், அவர்கள் இந்த 100 சதுர மீட்டர் நிலத்தை பெறுவதற்கு முன், அவர்களின் நிலம்/கட்டிடம் மாநில அரசுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    மூன்றாம் தீர்வு

    பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக அடையாளம் காணப்பட்ட இடத்தில் அதிகபட்சமாக 75 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கட்டிடம் கட்டப்படும்.

    அவர்களின் சொத்தை விட வழங்கப்படும் கட்டிடம் குறைவான மதிப்பை கொண்டிருந்தால். மீதமுள்ள சொத்து மதிப்பிற்கு இழப்பீடு பணமாக வழங்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா

    இந்தியா

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா விமானம்
    லக்னோ கட்டிடம் சரிந்து விபத்து: மீட்பு பணி தீவிரம் இந்தியா
    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது பாகிஸ்தான்
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025