74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள்
74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதன்முறையாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு துவங்கும் இந்த அணிவகுப்புகள் இந்திய ராணுவ பலம் மற்றும் பாரம்பரிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்நிகழ்ச்சிக்கு 6000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த அணிவகுப்பில் முதலில் எகிப்திய ஆயுத படைகளின் 144 வீரர்கள் கொண்ட ஒருங்கிணைந்த இசைக்குழு மற்றும் அணிவகுப்பு குழு பங்கேற்கிறது. தொடர்ந்து 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதேசங்களிலுருந்தும், ஆறு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலிருந்து வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்கள், கலாச்சார பாரம்பரியம், பொருளாதாரம், பெண்களின் சக்தி ஆகியவை கொண்டு 'புதிய இந்தியா' உருவாவதை சித்தரிக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இடம்பெறும்.
'ப்ளைபாஸ்ட்' நிகழ்ச்சியில் முதன்முறையாக 9 ரஃபேல் போர் விமானங்கள்
கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் தலைமையில் அணிவகுப்புகள் நடைபெறும். 'வந்தே பாரதம்' நடனப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 479 கலைஞர்கள் கொண்டு கலாச்சார நிகழ்ச்சிகள், கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் டேர் டெவில்ஸ் குழுவின் இருசக்கரவாகன நிகழ்ச்சி ஆகியன நடைபெறும். மேலும் ப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் முப்படை விமானங்கள் பங்கேற்கும். 9 ரஃபேல் போர் விமானங்கள் ப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளுடன் துவங்கிய குடியரசு தின விழா, ஜனவரி 29ம் தேதி பாரம்பரிய 'பீட்டிங் தி ரிட்ரீட்' விழாவுடன் முடிவடையவுள்ளது. தொடர்ந்து, நிகழ்ச்சியின் பொழுது ரைசினா மலைகள் மீது 3500 உள்நாட்டு ஆளில்லா விமானங்கள் அடங்கிய மிகப்பெரிய ஆளில்லா விமானங்கள் வானத்தில் மின்னும் என்பது குறிப்பிடத்தக்கது.