NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
    இந்தியா

    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023, 03:37 pm 1 நிமிட வாசிப்பு
    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்
    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம்

    கடந்த ஜனவரி 9ம்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. இதில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமானநிலைய முனையத்தில், விமானத்திற்கு அழைத்து செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஏற்றாமல் இந்த விமானம் கிளம்பி டெல்லிக்கு சென்றுள்ளது. பயணிகளை ஏற்றாமல் அவர்களது உடமைகளை மட்டும் ஏற்றிக்கொண்டு இந்த விமானம் சென்றது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து மன்னிப்பு கோரிய 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அந்த விமானத்தில் இருந்து அனைத்து பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 55 பயணிகள் அடுத்த ஓராண்டிற்கு இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் விமானத்தில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் விமான நிறுவனம் அறிவித்தது.

    ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி

    இந்நிலையில், பயணிகளை விட்டு சென்ற விவகாரம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகளை ஏற்றி செல்வது குறித்து முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதே போல், ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணிகள் சிறுநீர் கழித்த விவகாரத்தில் மொத்தம் ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்

    சமீபத்திய

    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    மார்ச் 28க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தொடங்கியது கார்த்தி
    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு

    இந்தியா

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023