இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,848 என பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றால் புதிதாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படாத நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,30,740 பேர் என்று பதிவுகள் தெரிவிக்கிறது.
அதே போல், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,41,50,131 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 220,45,87,141 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேற்று ஒரே நாளில் 5,44,779 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மீண்டும் பரவ துவங்கியுள்ள உருமாறிய 'பிஎப் 7' கொரோனா வைரஸ்
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 74 பேர் மீண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.
தற்போது மீண்டும் சீனாவில் 'பிஎப் 7' என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வீரியத்தோடு பரவி வருகிறது.
சீனாவை தொடர்ந்து உலக நாடுகளுக்கும் இந்த நோய் தொற்று பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நாசல் தடுப்பூசிக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.