குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார். தடையை நீடிப்பதற்காக, தற்போதுள்ள சட்டம்/விதிகளின் கீழ் திருத்தங்களை கொண்டு வர முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார். குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்வதற்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் FSSA, 2006இன் பிரிவு 30(2)(ஏ) இன் கீழ் உணவு பாதுகாப்பு ஆணையரால் வழங்கப்படுகிறது.
புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது புகையிலை பொருட்கள் தான்: அமைச்சர்
குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு அறிக்கையை வெளியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதற்கு மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்காக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் அறிக்கையில், "உணவு பாதுகாப்பு ஆணையர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடை விதிக்க உத்தரவிடுகிறார்கள். தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்களே வாய் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.