Page Loader
ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல்
காஷ்மீர் பனியில் விளையாட்டுத்தனமாக சண்டையிடும் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியின் வீடியோ வைரல்

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல்

எழுதியவர் Sindhuja SM
Jan 30, 2023
06:42 pm

செய்தி முன்னோட்டம்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைபயணம் நேற்றோடு முடிவடைந்தது. இதை முன்னிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி பனி பந்துகள் செய்து விளையாடி கொண்டிருப்பது போல் இருக்கிறது. காஷ்மீரில் சனிக்கிழமை(ஜன 28) நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையின் கடைசிக் கட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரரின் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டார். ஸ்ரீநகரில் இன்று நடைபெறவிருந்த மெகா பேரணியுடன் ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணம் நிறைவு பெறுகிறது. காஷ்மீர் எதிர்கட்சி தலைவர்களான ஃபரூக் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலான ராகுல் காந்தியின் வீடியோ