உலக செய்திகள்
பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி
பிரேசிலின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடந்த விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
பயணிகளின் பைகளில் இருந்து பணத்தை திருடி கேமராவில் சிக்கிய விமான நிலைய அதிகாரிகள்
அமெரிக்கா: மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக(TSA) அதிகாரிகள் பயணிகளின் பைகளில் இருந்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்
டைம் இதழ் மற்றும் ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா தொகுத்த 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் டாப் 100 பட்டியலில் இந்தியாவில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முகமையின் தலைவர், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் கடுமையான உலகளாவிய பசி நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள்; எச்சரிக்கை மணி எழுப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள்
பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
லிபியா: கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, டெர்னா நகரில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ: போர்ச்சுகல் தெருக்களில் ஆறாக ஓடிய 2.2 மில்லியன் லிட்டர் ஒயின்
கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலில் உள்ள சாவோ லோரென்கோ-டி-பைரோ என்ற ஒரு சிறிய நகரத்தின் தெருக்களில் சிவப்பு ஒயின் ஆறாக ஓடியது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி
சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சியில்(BRI) இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சீனப் பிரீமியர் லி கியாங்கிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் போது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது.
சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து
கனேடிய அதிகாரிகள் பொதுப் பள்ளியில் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்த அனுமதிக்க மறுத்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்
வட கொரியா நேற்று ஒரு உருவகப்படுத்தப்பட்ட "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல்" பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன?
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டை அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணிப்பார் என்றும், சீனக் குழுவை பிரதமர் லீ கியாங் தலைமை தாங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையை திடீரென்று நிறுத்தியது கனடா
இந்தியாவுடனான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் அதிபர் ஆன தமிழர்: யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்?
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்திற்கு தென்கிழக்காசிய நாடுகளும் எதிர்ப்பு
சர்ச்சைக்குரிய சீனாவின் புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் பகுதிகளை சேர்த்ததாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சில மணிநேரங்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை
அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரித்து ஒரு புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிய தடை
பிரான்சின் மதச்சார்பற்ற கல்விமுறை சட்டங்களை மீறுவதால், பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் அபயா உடை அணிவதை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்ய உள்ளனர்.
அமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்
அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார்.
டென்னிஸில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த 24 வயது இளம் வீரர் மைக்கேல் யெமர்
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரும், உலகின் முன்னாள் 50ம் நிலை வீரருமான மைக்கேல் யெமர் திடீரென தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள்
நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்கேற்புடன், பழம்பெரும் லோச் நெஸ் அரக்கனை கண்டறியும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோர் வடக்கு ஸ்காட்லாந்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) ஒன்று கூடியுள்ளனர்.
இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண்
இங்கிலாந்தில் ஒரு பெண் தனது சகோதரிக்கு தனது கருப்பையை தானமாக வழங்கியுள்ளார்.
இஸ்ரோவை கேலி செய்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சந்திராயன்-3 திட்டத்திற்கு பாராட்டு
பல ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(இஸ்ரோ) கேலி செய்து வரும் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் நேற்று(ஆகஸ்ட் 22) இந்தியாவின் மூன்றாவது சந்திர விண்கலமான 'சந்திராயன் 3'-ஐ பாராட்டினார்.
முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.
உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை
அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.
புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
கொரோனாவின் புதிய மாறுமாடு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 'எரிஸ்' என்று பெயரிடப்பட்டது.
அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம்
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வரும் வியாழக்கிழமை சிதைந்த போன ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்கவிட போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது?
லிபியாவில் வைத்து ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவிற்கு திரும்பினர்.
காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
4 ஆம் வகை சூறாவளியான வெப்பமண்டல புயல் ஹிலாரி நேற்று(ஆகஸ்ட் 20) அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை தாக்கியது.
2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு பரஸ்பர வரி அதிகரிக்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் காக்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்ததால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி
மத்திய மாலியின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 30 பேர் பலி
தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.