Page Loader
உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்
உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்

உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 15, 2023
09:16 pm

செய்தி முன்னோட்டம்

டைம் இதழ் மற்றும் ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா தொகுத்த 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் டாப் 100 பட்டியலில் இந்தியாவில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. டைம் மற்றும் ஸ்டேடிஸ்டா உலகளவில் சிறந்து விளங்கும் 750 நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. வருவாய் வளர்ச்சி, பணியாளர் திருப்தி ஆய்வுகள் மற்றும் வேலை சூழ்நிலை, சமூக மற்றும் கார்ப்பரேட் ஆளுகை தரவு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டது. இந்த தரவரிசையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஒருகாலத்தில் உலக பொருளாதாரத்தை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கி வந்த நிலையில், டிஜிட்டல் புரட்சியால் மாற்றம் நிகழ்ந்துள்ளதை இது வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

8 indian companies in time 750 list

750 நிறுவனங்களில் எட்டு இந்திய நிறுவனங்கள்

தரவரிசையில் மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) மற்றும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (முன்னர் ஃபேஸ்புக்) போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இன்ஃபோசிஸ் இந்த பட்டியலில் 64வது இடத்தில் உள்ளதோடு, இன்ஃபோசிஸ் தவிர, 750 நிறுவனங்களைக் கொண்ட டைம் பட்டியலில், மேலும் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. விப்ரோ லிமிடெட் 174வது இடத்திலும், மஹிந்திரா குழுமம் 210வது இடத்திலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 248வது இடத்திலும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் 262வது இடத்திலும், எச்டிஎஃப்சி வங்கி 418வது இடத்திலும், டபிள்யூஎன்எஸ் குளோபல் சர்வீசஸ் 596வது இடத்திலும், ஐடிசி லிமிடெட் 596வது இடத்திலும் உள்ளன. இதற்கிடையில், இன்ஃபோசிஸ் உலகின் முதல் மூன்று தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.