ரஷ்ய பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 30 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூன்று குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.
திங்கட்கிழமை இரவு மகச்சலா நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் உள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது என்றும், பின்பு அது பக்கத்தில் இருந்த பெட்ரோல் நிலையத்திற்கும் பரவியது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ரஷ்ய துணை சுகாதார அமைச்சர் விளாடிமிர் பிசென்கோ தெரிவித்துள்ளார்.
டின்
மொத்தம் 102 பேர் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் என்று தாகெஸ்தானி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
600 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தீ பரவியதால், அதை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு மூன்றரை மணி நேரம் ஆனது.
இந்த சம்பவத்தின் விளைவாக மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததையடுத்து, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே யாரும் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது.
எதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பதை ஆராய கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பலத்த காயமடைந்தவர்களை மாஸ்கோவிற்கு அழைத்து செல்ல மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் அரசாங்க Il- 76 விமானம் மகச்சலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.