மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி
செய்தி முன்னோட்டம்
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் காக்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள வஜிரிஸ்தானில் கட்டுமானத் திட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிரக்கில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"அந்த தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இராணுவச் சாவடி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அடியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு IED வெடித்தது" என்று வடக்கு வஜிரிஸ்தானின் துணை ஆணையர் ரெஹான் கட்டாக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் 2021 ஆம் ஆண்டு கைப்பற்றினர்.
டுய்வ்
பாகிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
தீவிரவாத தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் நடக்கின்றன என்றும், ஆப்கானிஸ்தானிலும் சில தீவிரவாத தாக்குதல் நடக்கிறது என்றும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. அதை ஆப்கானிஸ்தான் தலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்களை தவிர பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான்கள் என்று ஒரு தனி பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இயங்கி வருகிறது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) என்று அழைக்கப்படும் இந்த குழு, போலீஸ் அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சில பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்தியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன், கைபர்-பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் 23 குழந்தைகள் உட்பட 54 பேர் உயிரிழந்தனர்.