
"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு தன்னை பற்றி நன்கு தெரியும் என்று கூறியிருக்கும் அவர், எனவே தனது தேர்தல் போட்டியாளர்களுடன் பொது மோதல் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான பந்தயத்தின் முதல் விவாதம் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.
காவ்ன்ல்
நான்கு மிகப்பெரும் வழக்குகளில் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
இந்நிலையில் ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், "நான் அதிபராக இருந்த போது, மிகப்பெரிய வெற்றிகரமான சாதனையை படைத்திருக்கிறேன். அமெரிக்க மக்களிடையே எனக்கு பிரபலம் அதிகம். எனவே நான் விவாதங்களைச் செய்ய மாட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.
தன்னை குடியரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளர் என்று அழைத்த கொண்ட டொனால்ட் டிரம்ப், பிற குடியரசு கட்சி வேட்களர்களுடன் ஒப்பிட முடியாத வகையில் தான் முன்னிலையில் இருப்பதை கருத்துக் கணிப்புகள் காட்டுவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு நான்கு மிகப்பெரும் வழக்குகளில் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
எனினும், 62 சதவீதம் பேர் அவருக்கு தான் வாக்களிப்பார்கள் என்று பல முக்கிய கருத்துக் கணிப்புகளில் கூறி வருகின்றன.