புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்
கொரோனாவின் புதிய மாறுமாடு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, 'எரிஸ்' என்று பெயரிடப்பட்டது. அந்த 'எரிஸ்' கொரோனா மாறுபாட்டின் துணை மாறுபாடுபடான BA.2.86 வைரஸ் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'எரிஸ்' கொரோனா வைரஸுடன் ஒப்பிடும் போது, BA.2.86 வகை கொரோனா மிகவும் மாறுபட்ட வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், BA.2.86 மாறுபாட்டை முழுமையாக புரிந்து கொள்ள கூடுதல் தரவுகள் தேவைப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும், கோவிட்-19இன் இந்த துணை மாறுபாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறிய உலக சுகாதார அமைப்பு, "கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு" என இந்த BA.2.86 வைரஸை வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்பட்ட எரிஸ் பாதிப்பு
இதுவரை, அமெரிக்கா,டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நான்கு நாடுகளில் BA.2.86 கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், 'ஏரிஸ்' கொரோனா வகை அமெரிக்கா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான்-XBB.1.9.2 கொரோனா வகையுடன் ஒப்பிடும் போது, 'எரிஸ்' வகை கொரோனா பொது சுகாதாரத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, கனடா, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் யுனைடெட் கிங்டம் ஆகிய நாடுகளில் குறைந்தபட்சம் 100-பாதிப்புகள் 'எரிஸ்' கொரோனா வகையால் ஏற்பட்டுள்ளது. சீனாவில் தான் அதிகபட்சமான( 2,247 பாதிப்புகள்) எரிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஒரே ஒரு எரிஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.