Page Loader
UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
UAEயின் கோல்டன் விசா கிடைப்பது மிகவும் பெரிய விஷயமாகும்.

UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்

எழுதியவர் Sindhuja SM
Aug 22, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரி சலுகைகளும், வாழ்வாதாரங்களும் அதிகம் இருப்பதால் கோடீஸ்வரங்களில் இருந்து வேலை தேடுபவர்கள் வரை பெரும்பாலானோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தான் தங்களது புகலிடமாக வைத்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 'செட்டில்' ஆக வேண்டும் என்பது இன்றுவரை பலரின் கனவாக இருந்து வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு UAEயின் கோல்டன் விசா கிடைப்பது மிகவும் பெரிய விஷயமாகும். அது மட்டுமல்லாமல், கடந்த அக்டோபர் மாதம் முதல் UAE தங்களது விசா கொள்கைகளில் பல மாற்றங்களை செய்துள்ளதால், கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன.

டியூவ்க்

UAE கோல்டன் விசாவுக்கான புதிய சலுகைகள்

முன்பிருந்த கோல்டன் விசா கொள்கைக்கு மாற்றாக, இனி கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் UAEக்கு வெளியே தங்கி இருக்கலாம். மற்ற வளைகுடா நாடுகளை போல் அல்லாமல், வேலை இருந்தால் தான் நாட்டுக்குள் அனுமதிப்போம் என்ற விதி UAE கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடையாது. அவர்கள் ஸ்பான்சர் மற்றும் வேலை இல்லமலையே UAEக்கு செல்லலாம். அவர்கள் எந்தவொரு குடும்ப உறுப்பினருக்கும்(வயது வரம்பு இல்லை) ஸ்பான்சர் செய்யலாம். மேலும், UAE கோல்டன் விசாவிற்கு கீழ், 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க விசாக்கள் வழங்கப்படுகின்றன. விசா வைத்திருப்பவர் உயிரிழந்து விட்டால், அந்த விசா காலவரம்பு முடியும் வரை அவரது கும்பத்தினர் விசா சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்