Page Loader
உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை
துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 78 சதவீத பேர் வெள்ளையின குழந்தைகள் ஆவர்.

உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை

எழுதியவர் Sindhuja SM
Aug 23, 2023
09:58 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இறப்பு தரவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வு, AAPஇன் இதழான குழந்தை மருத்துவத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020ஆம் ஆண்டில் 4,368 குழந்தைகளும், 2019ஆம் ஆண்டில் 3,390 குழந்தைகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். அந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 4,752ஆக உயர்ந்துள்ளது. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான இறப்பு தரவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், வற்றலாற்றிலேயே 2021ஆம் ஆண்டில் தான் அதிக குழந்தைகள் துப்பாக்கியால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜ

அதிக அமெரிக்க குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமாக இருக்கும் துப்பாக்கிகள்

2020ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அதிக குழந்தைகள் உயிரிழப்பதற்கு துப்பாக்கி சூடுகளே முதல் காரணமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நாஷ்வில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, டென்னசியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது பாதுகாப்பு குறித்த ஒரு சிறப்பு அமர்வை சமீபத்தில் நடத்தினர். அந்த அமர்வு தொடங்கிய போது இந்த புதிய ஆய்வும் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி, 67 சதவீத துப்பாக்கிக் கொலைகளுக்குக் கறுப்பினக் குழந்தைகள் காரணமாக இருக்கின்றனர். துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 78 சதவீத பேர் வெள்ளையின குழந்தைகள் ஆவர்.