Page Loader
புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
கடற்கரைகளுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுதியவர் Sindhuja SM
Aug 21, 2023
02:53 pm

செய்தி முன்னோட்டம்

4 ஆம் வகை சூறாவளியான வெப்பமண்டல புயல் ஹிலாரி நேற்று(ஆகஸ்ட் 20) அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை தாக்கியது. இது போன்ற நிகழ்வு கலிபோர்னியாவில் அரிதாக நடக்கக்கூடியது என்பதால், தென்மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், இதனால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்த உடனடியாக தகவல் இல்லை. இதனையடுத்து, கடற்கரைகளுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவை அடைவதற்கு முன், புயல் ஹிலாரி மெக்சிகோவை தாக்கியது. இதனால், அங்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டது.

டலன்

தெற்கு கலிபோர்னியாவில் அவசரகால நிலை பிரகடனம்

மெக்ஸிகோவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 19,000 மீட்பு வீரர்களை மெக்சிகன் அரசாங்கம் நிலைநிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 1,725 ​​பேர் மெக்சிகோ ராணுவத்தால் திறக்கப்பட்ட 35 முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், கலிஃபோர்னியாவில், ஐந்து புயல் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்(உள்ளூர் நேரம்) புயலின் மையப்பகுதி கலிபோர்னியாவில் இருந்தது. மணிக்கு 95 கிமீ வேகத்தில் வீசிய புயல் காற்று 37 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனையடுத்து தெற்கு கலிபோர்னியாவில் அவசரகால நிலையை ஆளுநர் கவின் நியூசோம் பிரகடனப்படுத்தினார். கடும் புயலினால் ஏற்படும் விளைவுகளுக்கு தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் மேலும் வலியுறுத்தினார்.