உலக செய்திகள்
பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது.
காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது?
ஹமாஸ் ஏன் அக்டோபர்-6ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது என்பதை அறிய 1973ஆம் ஆண்டின் யோம் கிப்பூர் போர் குறித்து நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தரை-கடல்-வான் தாக்குதலில் பல அமெரிக்க குடிமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ்
இஸ்ரேல்: ஹமாஸ் குழுவைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்களால் ஒரு குடும்பம் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ஹமாஸ் எதற்காக இஸ்ரேலை எதிர்த்து போரிடுகிறது? யார் அதற்கு உதவுகிறார்கள்?
இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.
12 கிராமங்களை முற்றிலுமாக அழித்த ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 2000க்கும் மேற்பட்டோர் பலி
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேலில் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலால் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன?
ஒவ்வொரு சனிக்கிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் வரலாற்று நிகழ்வு கட்டுரையை படித்து, இந்திய மற்றும் உலக வரலாற்று நிகழ்வுகளை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: 14 பேர் பலி, 78 பேர் காயம்
மேற்கு ஆப்கானிஸ்தானை இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலில் போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன போராளிகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலில் 'போர் நிலை' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்: வைரலாகும் வீடியோக்கள்
பல ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
'ஆபரேஷன் இரும்பு வாள்': பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக 'இரும்பு வாள்' நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 12:15 மணியளவில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்
தடை செய்யப்பட்ட காசா பகுதியில் இருந்து கடுமையான ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது.
அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்?
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கடந்த சனிக்கிழமை கராச்சியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு
குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு இன்று(அக் 4) வழங்கப்பட்டது.
பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி
மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெவின் மெக்கார்த்தி
கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று(அக் 3) அமெரிக்க நாடாளுமன்ற சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார்.
மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள்
2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அந்த போட்டிகள் நடைபெற இருக்கும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சிகள் தொந்தரவு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம்: கனடாவுடன் இணைந்து பணியாற்றி வரும் அமெரிக்கா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை சுட்டுக் கொன்றதில் இந்திய அரசின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு இன்று(அக். 2) நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
'கொரோனாவை விட கொடியது': 'நோய் X' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அடுத்த தொற்றுநோய் 50 மில்லியன் உயிர்களை எடுக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழு தலைவர் டேம் கேட் பிங்காம் கூறியுள்ளார்.
வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி
இன்று துருக்கியின் நாடாளுமன்றம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார்.
துருக்கிய நாடாளுமன்றம் அருகே பயங்கரவாத தாக்குதல்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள துருக்கிய நாடாளுமன்றம் அருகே இன்று(அக். 1) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
இரவு முழுவதும் பெய்த கனமழையால் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடங்கியுள்ளது.
முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா
பல வாரங்களுக்கு முன்பே ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரூபர்ட் முர்டோக் ஓய்வு
அமெரிக்காவின் ஃபாக்ஸ் மற்றும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 92 வயதான ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.
கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் இன்று ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.
கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ
2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கின் கேங் அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்தது தெரிய வந்ததால் தான் பதவி நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா
கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு
தெற்கு கரோலினாவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் போர் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(செப் 17) காணாமல் போனது.