துருக்கிய நாடாளுமன்றம் அருகே பயங்கரவாத தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள துருக்கிய நாடாளுமன்றம் அருகே இன்று(அக். 1) பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"எங்கள் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பொது இயக்குநரகத்தின் நுழைவு வாயிலுக்கு முன் காலை 9:30 மணியளவில்(0630 GMT) வணிக வாகனத்தில் இரண்டு தாக்குதல்காரர்கள் வந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்" என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார் என்றும், அவருடன் வந்த இன்னொரு தாக்குதல்காரர் கொல்லப்பட்டார் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜ்வ்க்ட்சபை
பல அமைச்சகங்களும் துருக்கிய நாடாளுமன்றமும் இருக்கும் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்
இந்த தாக்குதலால் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இது தவிர வேறு எந்த உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
தாக்குதல் நடந்த அதே பகுதியில் தான் துருக்கியின் பல அமைச்சகங்களும் துருக்கிய நாடாளுமன்றமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கிய நாடாளுமன்றம், இன்று அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் உரையுடன் மீண்டும் திறக்கப்படவிருந்தது என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது அப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதால், அந்த மாவட்டம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.