இஸ்ரேல் மீது மிகப்பெரும் தாக்குதல்: வைரலாகும் வீடியோக்கள்
பல ஆண்டுகளுக்கு பிறகு பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால், இஸ்ரேலில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காசா பகுதியில் இருந்து இடைவிடாத ராக்கெட் தாக்குதலை நடத்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள், தெற்கு இஸ்ரேலின் சில பகுதிகளுக்குள் ஊடுருவினர். இதனால், இஸ்ரேலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேலும் பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலை தொடங்கியுள்ளது. பாலஸ்தீன பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்ட பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவுகளை இப்போது பார்க்கலாம்.