
வீடியோ: துருக்கிய நாடாளுமன்றம் அருகே தன்னைத்தானே வெடிக்கச் செய்த பயங்கரவாதி
செய்தி முன்னோட்டம்
இன்று துருக்கியின் நாடாளுமன்றம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சக்திவாய்ந்த வெடிச்சத்தம், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து பல கிலோமீட்டர் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
துருக்கி உள்துறை அமைச்சகத்தின் நுழைவு வாயிலுக்கு முன் இன்று காலை 9:30 மணியளவில்(0630 GMT) வணிக வாகனத்தில் இரண்டு தாக்குதல்காரர்கள் வந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். மற்றொரு தாக்குதல்காரர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலால் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் போது பதிவான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது பதிவான வீடியோ
On camera, suicide bomber blows himself up near #Turkey parliament
— NDTV (@ndtv) October 1, 2023
Read here ➡️https://t.co/6TSs9vQcbo pic.twitter.com/K2EyWeM2Qy