NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு
    அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 03, 2023
    04:43 pm

    செய்தி முன்னோட்டம்

    பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நோபல் பரிசை தீர்மானிக்கும் நடுவர் குழு இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசை அறிவித்தது.

    இந்த வாரம் வழங்கப்படும் இரண்டாவது நோபல் பரிசு இதுவாகும். நேற்று கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளை மேற்கொண்ட மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிக்ஸஜ்

    நோபல் பரிசுகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

    டைனமைட் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்தின் பேரில் நோபல் பரிசு உருவாக்கப்பட்டது.

    அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(83.19 கோடி ரூபாய்) மதிப்புள்ள நோபல் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசுகள் சில நேரம் சர்ச்சையாக பேசப்பட்டாலும், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் பெரும் மதிப்புடன் வரவேற்கப்படுகின்றன.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பெரும் விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு இதற்கு முன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நோபல் பரிசு
    அமெரிக்கா
    ஜெர்மனி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நோபல் பரிசு

    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் தென்னாப்பிரிக்கா
    நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு உலகம்
    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு  உலகம்

    அமெரிக்கா

    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    19 வயதிலேயே முதல் கிராண்டுஸ்லாம் பட்டத்தை வென்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காஃப் டென்னிஸ்
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  இந்தியா
    ஆந்திர மாணவியின் மரணம் குறித்து கிண்டலடித்த அமெரிக்க போலீசார் மீது விசாரணை கோரும் இந்தியா  வைரல் செய்தி

    ஜெர்மனி

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025