Page Loader
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள் 
இதனால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள் 

எழுதியவர் Sindhuja SM
Oct 07, 2023
01:24 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் இன்று மதியம் 12:15 மணியளவில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 12:11 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலும், அதைத் தொடர்ந்து 12:19 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலும், 12:42 மணிக்கு 6.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்தது. இதனால் உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த செவ்வாய்கிழமை, 6.2 ரிக்டர் அளவிலான நான்கு நிலநடுக்கங்கள், நேபாளத்தை அடுத்தடுத்து தாக்கியது. இதனால், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

ஆப்கானிஸ்தானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்