2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை(LeT) சேர்ந்த மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாத தலைவர்களில் ஒருவரான முப்தி கைசர் ஃபரூக், கராச்சியில் "தெரியாத நபர்களால்" சுட்டுக் கொல்லப்பட்டார். முப்தி கைசர் ஃபரூக், லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவிய நபர்களுள் ஒருவர் ஆவார். இவர், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகளுள் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் போது முதுகில் குண்டு காயம் அடைந்த ஃபரூக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழநதார். ஃபரூக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், NewsBytesஆல் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.