பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி
செய்தி முன்னோட்டம்
மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இங்கிலாந்து உளவுத்துறையின் ரகசிய அறிக்கையின்படி, அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒரு "சங்கிலி மற்றும் நங்கூரம்" பொறியில் சிக்கியது.
இதனால், அந்த நீர்மூழ்கிக் கப்பலின் ஆக்ஸிஜன் அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டது.
இந்த கோளாறினால் வெளியான விஷவாயுவை சுவாசித்த 55 சீன மாலுமிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சீன PLA கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின்(093-417) கேப்டன் உட்பட 21 அதிகாரிகள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
எனினும், இந்த சம்பவம் நடந்ததை சீனா அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
ட்ஜ்வ்க்ப்
சர்வதேச உதவியை மறுத்த சீனா
சிக்கித் தவித்த அந்த நீர்மூழ்கிக் கப்பலை காப்பாற்ற முன்வந்த சர்வதேச உதவியையும் சீனா நிராகரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
சீன PLA கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சீன அரசாங்கத்திற்கு சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆகஸ்ட் 21 ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி 08:12 மணிக்கு மஞ்சள் கடலில் ஒரு கப்பல் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக 22 அதிகாரிகள், 7 அதிகாரி கேடட்கள், 9 சிறு அதிகாரிகள் மற்றும் 17 மாலுமிகள் உட்பட 55 பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் கேப்டன் கர்னல் ஸு யோங்-பெங்கும் அடங்குவார்." என்று இங்கிலாந்து உளவுத்துறையின் ரகசிய அறிக்கை கூறுகிறது.