அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் கெவின் மெக்கார்த்தி
கெவின் மெக்கார்த்தி செவ்வாயன்று(அக் 3) அமெரிக்க நாடாளுமன்ற சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஜனநாயகக் கட்சியுடன் அவர் ஒத்துழைத்து வந்ததால் கோபமடைந்த தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியினர், மெக்கார்த்திக்கு எதிராக ஓட்டளித்து அவரை வெளியேற்றினர். 234 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் ஒரு சபாநாயகர் சபையில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். அவரது வெளியேற்றத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தவர்களில் தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே இருந்தனர். ஆனால், பெரும்பாலான ஜனநாயக கட்சியினர் எட்டு குடியரசுக் கட்சியினருடன் இணைந்ததால், மெக்கார்த்தியின் பதவியை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.
வரலாற்றில் முதல்முறையாக ஒரு அமெரிக்க சபையின் சபாநாயகர் வெளியேற்றம்
58 வயதான முன்னாள் தொழிலதிபர் மெக்கார்த்தி, அவையை விட்டு வெளியேறியதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அரசாங்க பணிநிறுத்தத்தைத் தவிர்க்க வெள்ளை மாளிகையின் ஆதரவுடன் சமீபத்தில் இருதரப்பு ஸ்டாப்கேப் நிதி நடவடிக்கையை அவர் நிறைவேற்றியபோது பழமைவாதிகளின் கோபத்திற்கு அவர் ஆளானார். புளோரிடா மாகாணத்தின் குடியரசு கட்சி தலைவர் மாட் கேட்ஸ், ஒருசில குடியரசு கட்சியினரை மட்டும் வைத்து கொண்டு தன்னால் மெக்கார்த்தியை வெளியேற்ற முடியும் என்று கூறி சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில், சமீபத்தில் அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக மிகவும் அரசியல்மயமாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தொடங்கிய சபாநாயகர் மெக்கார்த்திக்கு ஜனநாயக கட்சியினரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனால், வரலாற்றில் முதல்முறையாக ஒரு அமெரிக்க சபையின் சபாநாயகர் வெளியேற்றப்பட்டுள்ளார்.