வீடியோ: போர்ச்சுகல் தெருக்களில் ஆறாக ஓடிய 2.2 மில்லியன் லிட்டர் ஒயின்
கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்ச்சுகலில் உள்ள சாவோ லோரென்கோ-டி-பைரோ என்ற ஒரு சிறிய நகரத்தின் தெருக்களில் சிவப்பு ஒயின் ஆறாக ஓடியது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த நகரத்தில் உள்ள செங்குத்தான மலையிலிருந்து மில்லியன் கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அந்நாட்டு மக்கள் திகைத்துப் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியில் உள்ள டவுன் டிஸ்டில்லரிக்கு சொந்தமான 2-மில்லியன் லிட்டருக்கும் அதிகமான சிவப்பு ஒயின் கொண்ட பீப்பாய்கள் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒயின் அருகிலுள்ள ஒரு ஆற்றை நோக்கி பாய்ந்ததால் சுற்றுச்சூழல் எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டது. எனினும், இதை தடுக்க அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், அதை ஒரு வயல்வெளிக்கு திருப்பிவிட்டனர்.