மாலி நாட்டில் பயங்கரவாத துப்பாக்கி சூடு: 21 பொதுமக்கள் பலி
மத்திய மாலியின் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றனர். அடையாளம் தெரியாத ஆசாமிகள், பாண்டியாகரா நகருக்கு அருகில் உள்ள 'யாரோ' கிராமத்தை குறிவைத்து, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆயுதமேந்தியவர்கள் கிராமத்திற்குள் நுழைந்து மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு ஆபிரிக்க நாடான மாலி பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு நடந்த துவாரெக் பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடர்ந்து, அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் அந்நாடு போராடி வருகிறது.