உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முகமையின் தலைவர், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் கடுமையான உலகளாவிய பசி நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளார். அவர்கள் அடுத்த உணவை எப்போது சாப்பிடுவார்கள் என்று நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, மனிதாபிமான நிதி குறைந்து வரும் நிலையில் உணவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரோமிலிருந்து செயல்படும் 79 நாடுகளின் கூட்டமைப்பான உலக உணவு திட்ட மதிப்பீட்டின்படி, 783 மில்லியன் மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவர் இன்னும் ஒவ்வொரு இரவும் பசியுடன் உறங்கச் செல்வதாக தெரிய வந்துள்ளது.
கொரோனாவுக்கு பின் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு
இந்த ஆண்டு 345 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் அதிகரித்துள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மேற்கொண்ட மதிப்பீடுகளின்படி 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 47 மில்லியன் தனிநபர்கள் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகக் காட்டுகின்றன. கவலையளிக்கும் வகையில், தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 45 மில்லியன் குழந்தைகள் இதில் அடங்கும்.